டெல்லியில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 3.1 ஆக பதிவு.. வீதிகளில் மக்கள் தஞ்சம்!

டெல்லியில் இன்று நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் பொதுமக்களை பெரும் அச்சமடைய வைத்ததுள்ளது.
அரியானா மாநிலம் பரிதாபாத்தை மையமாக வைத்து நிலத்தடியில் 10 அடிக்கு கீழே நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4.08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது. இதனால் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டது.
தலைநகர் டெல்லியில் வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களை விட்டு பொதுமக்கள் அச்சத்தில் வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
#BREAKING: #earthquakes tremors felt in Delhi.
— Md Husnain (@mdrj007) October 15, 2023
Details awaited. #earthquake #Delhi #DelhiHalfMarathon #DelhiEarthquake #DelhiNCR #भूकंप #Tremors #ENGvsAFG #UttarPradesh #Haryana #Noida #INDvsPAK pic.twitter.com/uyyFjDbQ6G
முன்னதாக கடந்த 3-ம் தேதி தலைநகர் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் மேல் மேற்பரப்பு ஏழு டெக்டோனிக் தட்டுகளால் ஆனது. இந்த தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் இடங்களில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.