டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு.. பொதுமக்கள் பீதி!

 
Earthquake

டெல்லியில் இன்று மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைபகுதியை மையமாக வைத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்றிரவு ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதன் தொடர்ச்சியாக துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Earthquake

மேலும் இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக வடமாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் மற்றும் ஹரியானா உள்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓடிய மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதனிடையே டெல்லியில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

From around the web