மும்பையை தாக்கிய புழுதிப்புயல்.. ராட்சத இரும்பு பேனர் சரிந்து விழுந்து 8 பேர் பலி.. அதிர்ச்சி வீடியோ!

 
Mumbai

மகாராஷ்டிராவில் இன்று வீசிய புழுதிப்புயலின் போது, சுமார் 40 அடி உயர ராட்சத இரும்பு பேனர் சரிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் 100 அடி உயர விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.

dead-body

கனமழை மற்றும் சூறை காற்று காரணமாக 50-க்கும் மேற்பட்டோர் இன்று பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை திடீரென சரிந்து விழுந்தது.

இதில், விளம்பர பதாகை பெட்ரோல் பங்கில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 59 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.


புழுதிப் புயல் காரணமாக மும்பை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறக்கப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

From around the web