நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவன்.. உடந்தையாக இருந்த பெண்ணின் தந்தை!

 
Karnataka

கர்நாடகாவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய மனைவியை கொன்ற கணவன் உடலை மாமனார் உதவியுடன் ஆற்றியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா மண்டியாகொப்பலு கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீநாத் (33). இவரது மனைவி பூஜா (26). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இதனிடையே, பூஜா அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ரீல்ஸ் உள்ளிட்டவற்றில் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனால் ஸ்ரீநாத்திற்கு பூஜாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தன் மனைவி வெறோரு நபருடன் தொடர்பில் உள்ளார் எனவும் ஸ்ரீநாத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், செல்போன் பயன்படுத்துவதில் பூஜாவுக்கும் ஸ்ரீநாத்திற்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Murder

வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியின் துப்பட்டாவால் பூஜாவை கழுத்தை நெரித்து ஸ்ரீநாத் கொலை செய்தார். நடந்த சம்பவம் பற்றி தனது மாமனாரான பூஜாவின் தந்தையான ராஜசேகர் (53) என்பவருக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் சேர்ந்து கொலையை மறைக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, ஸ்ரீநாத்தும், மாமனார் ராஜசேகரும் சேர்ந்து பூஜாவின் உடலை கட்டி பைக்கில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு பூஜாவின் உடலில் கல்லைக்கட்டி ஆற்றில் வீசியுள்ளனர். பின்னர், கொலை சம்பவம் நடந்த மறுநாளில் இருந்து சில நாட்கள் ஸ்ரீநாத் அருகில் உள்ள மத வழிபாட்டு தலத்திற்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.

Police-arrest

பின்னர், போலீசில் சரணடைந்த ஸ்ரீநாத் தன் மனைவி பூஜாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், கொலைக்கு தன் மாமனார் ராஜசேகரும் உடந்தையாக இருந்ததையும் போலீசில் கூறினார். இதனை தொடர்ந்து மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய ஸ்ரீநாத்தையும் உடந்தையாக இருந்த மாமனார் ராஜசேகரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ஆற்றில் வீசப்பட்ட பூஜாவின் உடலை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

From around the web