தண்டவாளத்தில் சிக்கிய நாய்.. துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள்! நெகிழ்ச்சி வீடியோ

 
Mumbai

மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட நாயை ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் தெருநாய் ஒன்று தண்டவாளத்தை கடந்துள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த நாயின் பின்னங்காலில் ஒரு கால் தண்டவாளத்தின் இடுக்கில் சிக்கிக்கொண்டது. இதனால், காலை எடுக்க முடியாத நாய் ஊளையிடத் தொடங்கியது. இதைக்கேட்ட ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Mumbai

மேலும், நாய் சிக்கிக்கொண்ட தண்டவாளத்தில் ரயில் ஒன்று ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள், சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவர்கள் நாய் சிக்கியிருந்த இடத்திற்கு ஓடிச்சென்றனர்.

பின்னர், ஒரு ரயில்வே ஊழியர் தன் கையில் இருந்த கடப்பாறையில் அந்த தண்டவாள இடுக்கின் இடையில் மெல்ல ஒரு இடைவெளியை ஏற்படுத்தினார். இன்னொரு ஊழியர் நாயின் காலை வெளியே எடுத்துவிட்டார். தண்டவாளத்தின் பிடியில் இருந்து தப்பிய நாய் பின்னர் ஓடியது.

A post shared by Tauseef Ahmed (@mr._.rescuer)

இந்த சம்பவத்தை ரயில்வே பாலத்தின் மேல் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட நாயை ரயில் வருவதை அறிந்ததும் சாமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

From around the web