பிரசவத்தின்போது அந்தரங்க உறுப்பை வெட்டிய மருத்துவர்.. பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி.!

 
Karnataka

கர்நாடகாவில் பிரசவத்தின்போது மருத்துவர் குழந்தையின் அந்தரங்க உறுப்பை வெட்டிய நிலையில் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தேவநாகரெ மாவட்டம் சிக்கத்தேரி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன். இவரது மனைவி அம்ருதா. தம்பதிகள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது அம்ருதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

Operation

இந்த நிலையில், கடந்த ஜூன் 17-ம் தேதி சிக்கத்தேரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இயற்கையாக பிரசவம் நடக்க சூழல் எட்டப்படாத காரணத்தால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க முடிவெடுத்துள்ளனர்.

இதனையடுத்து, மருத்துவர் நிஜாமுதீன் என்பவரின் தலைமையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது, மருத்துவர் தவறுதலாக குழந்தையின் அந்தரங்க உறுப்பை வெட்டி இருக்கிறார். இதனால் குழந்தை உயிருக்கு போராடி வந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

baby

இந்த விஷயம் குழந்தையின் பெற்றோரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மேற்படி மருத்துவ துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

From around the web