வாடகை காதலி வேண்டுமா..? எல்லாத்துக்கும் தனி ரேட்.. வீடியோ வெளியிட்ட பெண்!

 
Dating

என்னை டேட்டிங்கிற்கு வாடகைக்கு எடுத்து கொள்ளலாம் என்று பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

வெளிநாடுகளில் நாகரீக கலாசாரத்திற்கு ஏற்ப வாடகைக்கு உங்களுக்கு காதலி கிடைப்பார்கள். இதற்காக தனி கட்டணம் வசூலிக்கப்படும்.  இதில், சில குறிப்பிட்ட விசயத்திற்கு அவர்கள் அனுமதி அளிப்பார்கள்.  ஜப்பான் நாட்டில் இதுபோன்ற கலாசாரம் காணப்படுகிறது.  வாடகைக்கு காதலிகள் கிடைப்பார்கள்.  அவர்களுடன் ஒன்றாக ஊர் சுற்றலாம்.  நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.  ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம்.

Love

ஆனால், இந்தியாவில் இதுபோன்ற விசயங்கள் காணப்படுவது அரிது.  இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம்பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். திவ்யா கிரி என்ற பெயரிலான அந்த பக்கத்தில், அந்த இளம்பெண் கண்ணாடியில் தெரிகிறார்.  அதன் மேல் பகுதியில், நீங்கள் சிங்கிளா? டேட்டிங் செல்ல விருப்பமா? என்னை டேட்டிங்கிற்கு வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்? என பதிவிடப்பட்டு உள்ளது.

இதன்பின்னர், காபியுடன் டேட்டிங் செல்ல ரூ.1,500, இரவு விருந்து மற்றும் படம் பார்க்க என்றால், ரூ.2 ஆயிரம், பைக் டேட்டிங் ரூ.4 ஆயிரம் (கைகளை கோர்த்தபடி செல்ல), நம்முடைய டேட்டிங் விவரங்களை பொதுவெளியில் பதிவிட ரூ.6 ஆயிரம், வார விடுமுறையில் வெளியே செல்ல (2 நாட்கள்) ரூ.10 ஆயிரம் என ஒவ்வொரு வகையான விசயத்திற்கும் ரேட் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

A post shared by Divya Giri (@divya_giri__)

விரிவான விவரங்களுக்கு விமர்சன பகுதியில் தொடர்பு கொள்ளவும்.  நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குவோம் என்றும் திவ்யா பதிவிட்டு உள்ளார்.  இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பதிவுகளை விமர்சனங்களாக வெளியிட்டு வருகின்றனர்.

From around the web