கள்ள உறவுக்கு இடையூறு.. காதலனின் மகனின் கழுத்தை நெரித்துக் கொன்ற பெண்..! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

டெல்லியில் முதல் மனைவியை பிரிய மறுத்த நிலையில் காதலனின் 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு டெல்லியில் உள்ள ரஜ்ஹோலா பகுதியைச் சேர்ந்தவர் ஜிகேந்தர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 11 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் ஜிதேந்தருக்கு, பூஜா குமாரி என்ற 24 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து முதல் மனைவியை பிரிந்து வந்த ஜிதேந்தருக்கு, பூஜாவுடன் திருமணம் நடைபெற்றது.
பின்னர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து விடுவதாக பூஜாவிடம் வாக்குறுதி அளித்திருந்த ஜிதேந்தர், பின்னர் தன் மகனை காரணம் காட்டி மீண்டும் முதல் மனைவியிடமே சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பூஜா, தன் காதலன் உடனான உறவுக்கு தடையாக இருக்கும் அந்த சிறுவனை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்.
அதன்படி கடந்த 10-ம் தேதி அன்று ஜிதேந்தர் வீட்டுக்கு சென்ற பூஜா குமாரி தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை கழுத்தை நெரித்துக் கொண்டு விட்டு யாருக்கும் தெரியாமல் சிறுவனின் உடலை ஒரு பெட்டியில் வைத்து கட்டிலுக்கு கீழே வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஜிதேந்தரும், அவரது மனைவியும் மகனைக் காணாமல் தேடி, பெட்டியில் உடலை காண்டுபிடித்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறிய மருத்துவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஜிதேந்தர் வீட்டின் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி ஒரு பெண் வீட்டுக்குள் வந்து சென்றதாக பலரும் கூறி உள்ளனர். இந்த சம்பவம் நடந்த பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து பார்த்ததில் பூஜாகுமாரிதான் சிறுவனை கொலை செய்துவிட்டு தப்பியோடினார் என்பது தெரியவந்தது.
பூஜா குமரி பெற்றோர், உறவினர் வீடுகள் என பல இடங்களுக்கு மாறி மாறி மறைந்து இருந்து வந்தார். ஒரு வழியாக பக்கர்வாலா பகுதியில் பதுங்கி இருந்த பூஜா குமாரியை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கொலை குற்றத்தை பூஜா குமாரி ஒப்புக் கொண்டுவிட்டார். திருமணத்தை மீறிய கள்ள உறவால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.