திருமணத்தில் DJ பாட்டு போடுவதில் தகராறு.. விருந்தனரின் கழுத்தை அறுத்த மாப்பிள்ளை வீட்டார்!

 
Uttar pradesh

உத்தர பிரதேசத்தில் கல்யாணத்தில் டிஜே பாடல் போடும் தகராறில் மாப்பிள்ளை பக்க விருந்தினர் பெண் வீடு சார்பாக வந்த விருந்தினரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சமீப காலமாக திருமண நிகழ்ச்சிகளில் டிஜே பாடல்கள் ஏற்பாடு செய்து ஒவ்வொருவர் வரும்போதும் பாடல்களை ஒலிபரப்பும் டிரண்ட் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தானிபூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமணத்தில், தான் மேடைக்கு வரும்போது குறிப்பிட்ட பாடலை இசைக்க விட வேண்டும் என்று மணப்பெண் விரும்பிக் கேட்டுள்ளார். 

murder

ஆனால் மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த பாடல்களையே ஒளிபரப்பியுள்ளது. இதனால் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம்  எழுந்துள்ளது. கடைசியில் ஒரு வழியாக இரு தரப்பினரும் சமாதானமாகி  நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது. 

ஆனால் மாப்பிள்ளை வீடு சார்பில் திருமணத்துக்கு வந்த  விருந்தினர் ஒருவர் ஆத்திரம்  அடங்காமல் பெண் வீடு சார்பில் வந்த  விருந்தினர் இரவு 11 மணிக்கு வண்டியில் வீடு திரும்பும்போது வழிமறித்து கத்தியால்  கழுத்தை அறுத்துள்ளார். 

Police

படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் பெண்ணின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மாப்பிள்ளை பக்க உறவினரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web