ஆம் ஆத்மியை தோற்கடித்தது பாஜக வா? காங்கிரஸ் கட்சியா?

 
அனில் அம்பானி வீட்டைத் தவிர எங்கு வேண்டுமானாலும் நேருக்கு நேர் விவாதத்திற்கு தயார் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்!

10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சி இந்த ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ளது. வெறும் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பாஜவிடம் தோற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளார் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் மகன் கடும் போட்டியை உருவாக்கியுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 38.51 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த பாஜக இந்தத் தேர்தலில் 45.58 சதவீத வாக்குகளைப் பெற்று 48 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. 53.57 சதவீதமாக இருந்த ஆம் ஆத்மியின் வாக்குகள் 43.57 சதவீதமாகக் குறைந்து 22 இடங்களை மட்டுமே பெற்றுத் தந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் 10 சதவீத வாக்குகள் 7 சதவீதம் பாஜகவுக்கும் 3 சதவீதம் காங்கிரஸ் கட்சிக்கும் சென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று  ஆம் ஆத்மியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் போக்கால் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இனியாவது எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு போராடுவார்களா என்று தெரியவில்லை!

From around the web