பயணிகள் ரயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

 
Uttar Pradesh

உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகரில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் செல்லும் சண்டிகர் - திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பிற்பகல் 2 மணியளவில் உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி பகுதியில் தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்தனர் எனறும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

Uttar pradesh

விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அங்கு 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பயணிகள் ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மற்றும் சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேலும், தற்போதைய சிஆர்எஸ் விசாரணையுடன் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. உதவிக்காக அரசாங்கம் ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது. கோண்டா (8957400965) மற்றும் லக்னோ (8957409292). காயமடைந்த பயணிகளின் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

From around the web