மாமனார் அறைக்கு தீ வைத்த மருமகள்.. வீடியோ எடுத்த கணவர்.. சம்பவத்தின் பின்னணி என்ன?

 
Fire

மாமனார் தூங்கிக் கொண்டிருந்தபோது, அறைக்கு மருமகள் தீ வைத்து எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ, படுத்து கொண்டிருந்த மாமனார் மீது ஆத்திரப்பட்ட மருமகள், பேப்பரில் தீ வைத்து அவர் மீது வீசியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு எங்கே, யார், எப்போது நடைபெற்றது என்ற விவரங்கள் எதுவும் தெரியவரவில்லை. எனினும் இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் மருமகளான இளம்பெண் ஒருவர், கோபத்தில் இருக்கிறார். இதனால் ஒரு பேப்பரில் தீ பற்ற வைத்து கொண்டு, மற்றொரு அறையில் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த மாமனார் மீது அதனை வீசுகிறார். அந்த தீயானது மாமனாரின் போர்வையில் விழுகிறது. இந்த நிகழ்வை கணவர் வீடியோவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Fire

அவர் உடனே அந்த பேப்பரை தட்டி விடவில்லை என்றால், அந்த போர்வையில் தீ பற்றிக்கொண்டிருக்கும். ஆனால் அவர் தட்டி விட்டார். இதனால் சேதம் தவரிக்கப்பட்டு விட்டது. தொடர்ந்து அந்த தீயை அணைக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பலர் மத்தியிலும் பல கருத்துகள் எழுந்து வருகிறது. தொடர்ந்து இந்த நிகழ்வுக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.

எனினும், சம்பவத்தன்று வீட்டில் உள்ள குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவதற்கு மருமகள் முயன்றதாகவும், ஆனால் குழந்தையை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மாமனார் கூறியதாகவும், இதனால் கடும் வாக்குவாதம், சண்டை, கோபம் ஏற்பட்டு மருமகள் இவ்வாறு செய்ததாகவும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இருப்பினும் இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலும் செய்தியும் வெளியாகிவில்லை. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web