வயதான மாமியாரை எட்டி உதைத்த மருமகள்.. கைது செய்யப்பட்ட ஆசிரியர்.. அதிர்ச்சி வீடியோ!

 
Kerala

கேரளாவில் 80 வயதுடைய மாமியாரை மருமகள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள தேவலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மனைவி மஞ்சுமோள். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தாமஸின் அம்மா எலியம்மா வர்கீஸ் (80). இவரை, தன்னுடனேயே வீட்டில் வைத்து தாமஸ் கவனித்து வருகிறார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

அந்த வீடியோவில், எலியம்மா ஹாலில் சேரில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டிருக்கிறார். அப்போது, தாமஸின் குழந்தை, தான் உட்காருவதற்கு சேர் கேட்கிறது. ஆனால், குழந்தை கேட்பதை எலியம்மா கவனிக்காமல் டிவி பார்த்தபடியே உள்ளார். அப்போது, அங்கு வந்த மருமகள் மஞ்சுமோள், “என்னுடைய மகள் உட்காருவதற்கு சேர் தரமாட்டியா?” என்று கோபமாக மாமியாரை திட்டுகிறார்.

பிறகு, சேரில் உட்கார்ந்து இருந்த மாமியாரை, இரு கைகளாலும் பிடித்து கொடூரமாக கீழே தள்ளிவிடுகிறார். இதில், கீழே தொப்பென்று விழுந்து விட்டார் எலியம்மாள். முட்டி, கைகளில் அடிபட்டு, வலியால் அழுதுகொண்டே விரல்களால் தேய்த்து கொள்கிறார். பிறகு, தட்டுத்தடுமாறி மெல்ல ஊன்றி எழுந்து வீட்டிற்குள் போய்விட்டார் எலியம்மாள்.

Kerala

இந்த சம்பவத்தை வீட்டில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தன்னை வீடியோ எடுப்பது தெரிந்தும்கூட, மஞ்சுமோள் அசரவேயில்லை. எதற்கும் அஞ்சவுமில்லை. மாறாக, தன்னுடைய மேலாடை உயர்த்தி காட்டினார். இதுவும், வீடியோவில் பதிவாகி உள்ளது. 80 வயது என்பதால், எலியம்மாள் பார்ப்பதற்கே பலவீனமாக காணப்படுகிறார்.

மஞ்சுமோள், எப்போதுமே தன்னுடைய மாமியாரை இப்படித்தான் அடித்து கொடுமைப்படுத்துவாராம். இந்த வீடியோதான் 2 நாட்களாகவே இணையத்தை சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள், மருமகளை திட்டி தீர்க்க துவங்கினர். அந்த பெண்ணின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேரள போலீசாரை டேக் செய்து வலியுறுத்தினர்.

உடனே கேரளா போலீசாரும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்ததுடன், நேரடியாகவே தாமஸ் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். மஞ்சுமோளையும் தெக்கும்பாகம் போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள். எலியம்மாளை அங்கிருந்து மீட்டு, உடனடியாக மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையும் தரப்பட்டது.


37 வயதாகும் மஞ்சுமோள், ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கெட்ட வார்த்தையில் திட்டி, நாற்காலியிருந்து கொடூரமாக தள்ளிய இந்த வீடியோவை எடுத்ததே, சொந்த மகன் தாமஸ்தானாம். தன்னுடைய அம்மாவை கொடுமைப்படுத்துவதை பலமுறை கண்டித்தும், மஞ்சுமோள் காதில் வாங்கவில்லையாம். தன்னுடைய மனைவியிடம், அம்மா படும் சித்ரவதையை பார்க்க முடியாமல்தான் வீடியோ எடுத்து பதிவிட்டதாக கூறுகிறார்.

தற்போது, காவல் நிலையம் வந்து, மனைவி மீதும் புகார் தந்துள்ளார். புகாரின் அடிப்படையில், மஞ்சுமோள் மீது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் பிரிவு 24 மற்றும் ஐபிசி 308 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web