மேற்கு வங்கத்தில் சூறாவளி தாக்குதல்.. 5 பேர் பலி.. நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர்!
மேற்கு வங்கத்தில் நேற்றிரவு வீசிய சூறாவளியால் ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி நகரில் நேற்றிரவு வீசிய கடுமையான சூறாவளியால் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதில் சிக்கி, ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 500 பேர் வரை காயமடைந்தனர். இந்த சூறாவளியால் வீடுகள் பல சேதமடைந்தன.
Tornado in Maynaguri , Jalpaiguri today
— Weatherman Shubham (@shubhamtorres09) March 31, 2024
Casualties also reported in the region & some houses damaged also https://t.co/Le5xHBtxOu pic.twitter.com/9Z9e3li6fi
இதனை தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய மற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்து விட்டு நேற்றிரவு ஜல்பைகுரிக்கு சென்று நிலைமையை பார்வையிட்டார். இதன்பின்னர், ஜல்பைகுரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்று சூறாவளியால் பாதித்த மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து முதல்வர மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிர்வாகம் வழங்கும். சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
இதில், உயிரிழப்பு என்பது மிக பெரிய பாதிப்பு. பேரிடர் மேலாண் முயற்சிகளை மேற்கொண்ட நிர்வாகத்தினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நிலைமையை எதிர்கொள்ள டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர் என்று கூறியுள்ளார்.