மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் கொடூரம்.. இளைஞரை தாக்கி காலை நக்க வைத்த கொடூர சம்பவம்..! அதிர்ச்சி வீடியோ

 
MP

மத்தியப் பிரதேசத்தில் ஓடும் காரில் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி தனது காலை நக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழங்குடி இனத்தை சேர்ந்தவர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அம்மாநில முதல்வர் பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறியதோடு, குற்றச் செயலில் ஈடுபட்டவர் மீது காவல்துறை நடவடிக்கை பாய்ந்தது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் ஓடும் கார் ஒன்றில் வாலிபர் ஒருவரை அடித்து, கட்டாயப்படுத்தி டீன்-ஏஜ் சிறுவனின் காலை வாலிபர் முத்தமிட செய்த வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில், மொஹ்சின் என்ற மந்திரி கான் என்பவர் காரில் பயணிக்கிறார். அவருடன் 3 பேர் மற்றும் ஒரு மைனர் சிறுவன் (வயது 17) பயணம் செய்கின்றனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து வாலிபர் மொஹ்சினை அடிக்கின்றனர். அந்த 3 பேரும் கட்டாயப்படுத்தி, வாலிபரை 17 வயது சிறுவனின் காலை முத்தமிட செய்கின்றனர். இந்த வீடியோ வைரலானது.

MP

இதுகுறித்து போலீசார் கூறும்போது, இது ஒரு பழி வாங்கும் செயலாக இருக்க கூடும் என தெரிவித்து உள்ளனர். மொஹ்சின், அவரது நண்பர்கள் லாலா பண்டிட், வன்ஷ் பதக் ஆகியோர் கடந்த மே 21-ம் தேதி தப்ரா பகுதியில் வைத்து சேத்தன் சர்மாவை அடித்து, தாக்கி உள்ளனர். இதுபற்றி அடுத்த நாள் போலீசில் மொஹ்சின் மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 23-ம் தேதி மொஹ்சின் கடத்தப்பட்டு உள்ளார். இதன் பின்னரே, அந்த மைனர் சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் மொஹ்சினை துன்புறுத்தி உள்ளனர். அதற்கு முன்பு, மொஹ்சினின் நண்பரான கரணை கடத்தி சென்று, அவரை வைத்து மொஹ்சினை வரவழைத்து உள்ளனர். அவர்கள் இருவரையும் காருக்குள் வைத்து கடுமையாக அடித்து உள்ளனர்.


காருக்குள் சட்டவிரோத ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என மொஹ்சின் கூறியுள்ளார். சில கி.மீ. கடந்த பின்னர் இரண்டு பேரும் காரில் இருந்து தப்பி சென்று உள்ளனர். மொஹ்சின் மீது மைனர் சிறுவன் மற்றும் அவரது நண்பரை தாக்கிய வழக்கு மற்றும் கலால் துறை சார்ந்த வழக்கு ஒன்றும் என 2 வழக்குகள் உள்ளன. இதில், கலால் துறை தொடர்புடைய வழக்கில் மொஹ்சினின் பெயர் மந்திரி கான் என குறிப்பிடப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் இபிகோ 341, 323, 324, 307 மற்றும் 34 என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

From around the web