காதலியின் தலையை வெட்டிய கொடூர காதலன்.. சஞ்சய் தத்தின் ரசிகன் என்று வீடியோ வெளியீடு

 
Uttar Pradesh

உத்தர பிரதேசத்தில் உள்ள கல்லறையில் ஒரு நபர் கத்தியால் பெண்ணின் தலையை துண்டித்து, வீடியோவில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள குர்ஜா நகர் கோட்வாலி பகுதியின் மொஹல்லா கிர்கானியில் உள்ள கல்லறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அந்த பெண்ணை கொலை செய்ததாக அந்த இளைஞர் வீடியோவில் தற்பெருமை பேசுகிறார்.

அந்த கொடூரமான குற்றத்திற்கு எந்த வருத்தமும் காட்டாத அந்த நபர், தனது நண்பர்கள் காட்டிக் கொடுத்தால் அவர்களையும் கொன்றுவிடுவேன் என்று கூறினார். மேலும் அந்த வீடியோவில் தான் செய்த குற்றத்தை பேசி சிரித்துவிட்டு, தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ரசிகன் என்றும், ‘கல்நாயக்’ படத்தில் தத் நடித்த ‘பல்லு பல்ராம்’ கேரக்டரின் ரசிகன் என்றும் கூறியுள்ளார்.

Murder

காதலில் துரோகத்தை எதிர்கொண்டதாகவும், துரோகத்திற்கு மரணம் தான் தண்டனை என்றும் அந்த மனிதன் கூறுவதுடன் சிலிர்க்க வைக்கும் வீடியோ தொடங்குகிறது. நான் அவளது கழுத்தை அறுத்தேன் என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார். குற்றத்தை செய்ய ஏன் படம் பார்த்தீர்கள் என்று கேட்டதற்கு, பல்லு. நான் சஞ்சய் தத்தின் ரசிகன் என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். வீடியோவில், அவர் தன்னை பல்லு என்று அடையாளம் காட்டுகிறார். இருப்பினும், அவரது பெயர் அட்னான் என்று  கூறப்படுகிறது.

மேலும் தான் செய்த குற்றத்தை தற்பெருமை கூறியதோடு அதிகாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதில் “எனது குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது தொட்டால், அனைவரையும் கொன்றுவிடுவேன், என் குடும்ப உறுப்பினர்களைத் தொடத் துணிந்தவர்களின் வீடுகளில் குண்டு வீசுவேன்” என்றும் கூறியுள்ளார்.


மேலும் அந்த வீடியோவில் ஒரே ஒரு கொலை செய்ததால் என்னை என்கவுன்டர் செய்யமாட்டார்கள், 10 அல்லது அதற்கும் மேல் கொலை செய்தால் தான் என்கவுன்டர் செய்வார்கள் என்றும் திமிராக பதில் பேசியுள்ளார்.

இந்நிலையில் பலியான பெண் ஆஸ்மா என அடையாளம் காணப்பட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

From around the web