இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 5.33 லட்சத்தை தாண்டியது

 
ICV

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 614 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 614 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,50,05,978 ஆக அதிகரித்துள்ளது.

Corona India

கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,321 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 270 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 4,44,70,346 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,311 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 20,860 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 93,53,15,761 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Corona India

இதுவரை 220.67 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

From around the web