ரயில் மோதி 3 வயது மகனுடன் தம்பதி பலி.. தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுத்த போது விபரீதம்!

 
Uttar Pradesh

உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த கணவன் மனைவி மற்றும் அவர்களது 3 வயது மகன் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் மூழ்கி இருக்கின்றனர். காவல் நிலையம், ரயில் நிலையம், ரயில்களில் முன்பு மற்றும் பேருந்துகளை நிறுத்தி ரீல்ஸ் எடுக்கும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதீத ஆர்வம் காரணமாக சிலர் உயிரைப் பணயம் வைத்து விதவிதமான ஸ்டண்டுகளை செய்து வீடியோ எடுக்கின்றனர். திறமையை காட்டுவதாக கூறி செய்யும் இத்தகைய ஸ்டண்டுகள் சில சமயம் மரணத்தில் முடிகின்றன.

dead-body

அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள லஹர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அகமது (26). இவரது மனைவி நஜ்னீன் (24). இந்த தம்பதிக்கு 3 வயதில் அப்துல்லா என்ற மகன் இருந்தான். 

இந்த நிலையில், இன்று காலை 11 மணி அளவில் அவர்களது 3 வயது மகன் அப்துல்லாவுடன் உமாரியா கிராமத்தின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு சோசியல் மீடியாவில் பதிவிடுவதற்காக ரீலிஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். 


அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் அவர்கள் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர். அவர்களது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

From around the web