இருமல் மூச்சுத்திணறல்! சரத்பவார் வீட்டில் ஓய்வு!!
Jan 26, 2025, 05:20 IST

இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவாருக்கு சற்று உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புனே மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் சரத் பவார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவருக்கு இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உரையைப் பாதியில் நிறுத்திக்கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்குச் சென்று ஓய்வு எடுக்க அறிவுறத்தப்பட்டது. அடுத்த 4 நாட்கள் சரத்பவார் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.