திடீர் அதிர்ச்சி கொடுத்த கொரோனா.. பிரதமரின் முதன்மை செயலாளர் உத்தரவு

 
PK mIshra

பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலங்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என பிரதமரின் முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் நீடித்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 69.05 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் இருந்து உலகம் தற்போது மீண்டுள்ள நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரானின் துணை மாறுபாடு ஈஜி.5.1 என்று அழைக்கப்படும் எரிஸ் (ERIS) வைரஸ் ஆனது அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

Variant-Corona

இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலங்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும், பிரதமரின் முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

புதிய வகை கொரோனா மற்றும் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் பி கே மிஸ்ரா உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். நிதி ஆயோக், சுகாதாரத்துறை உட்பட பல்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, உலக அளவில் நிலவும் புதிய வகை கொரோனா திரிபு குறித்து விவாதிக்கப்பட்டது. 50 நாடுகளில் EG.5 வகை கொரோனா திரிபும், 4 நாடுகளில் BA.2.86 வகை கொரோனா திரிபும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Corona India

கொரோனா தொற்றை எதிர்கொள்ள சுகாதார செயல்பாடுகள் ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்த பி.கே.மிஸ்ரா, புதிய வகை கொரோனாவை மாநிலங்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். போதிய அளவு மாத்திரைகள் அனுப்ப வேண்டும் என்றும், மரபணு பகுப்பாய்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

From around the web