சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500 குறைப்பு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு

 
Puducherry Puducherry

புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500 குறைத்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200, ஒன்றிய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூ.400 என கட்டணத்தை குறைத்து ஒன்றிய அரசு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண சலுகை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Gas

இந்த நிலையில், புதுச்சேரியில் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சிவப்பு அட்டைதாரர்களுக்கு ஒன்றிய அரசின் 200 ரூபாய் மானிய குறைப்பும் சேர்த்து புதுச்சேரி அரசு கூடுதலாக 300 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதனால் சிவப்பு அட்டைதாரர்களுக்கு சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்படுகிறது.

அதைப்போல, மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ஒன்றிய அரசின் 200 ரூபாய் மானியத்தை சேர்த்து, புதுச்சேரி அரசு கூடுதலாக 150 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதனால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக சிலிண்டருக்கு ரூ.350 குறைக்கப்படுகிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Gas

ஒன்றிய அரசு ரூ.200 மானியம் அளித்திருப்பது, புதுச்சேரி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது. ஒன்றிய அரசின் இந்த விலை குறைப்பை உளமார வரவேற்கிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேச குடிமக்கள் சார்பாக பிரதமர் அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

From around the web