தொடரும் சம்பவம்.. ரகசிய உறவு.. பெண்ணின் உடலை 6 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த வீட்டு உரிமையாளர்!!

 
Hyderabad

தெலுங்கானாவில் பெண்ணின் உடலை 6 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த வீட்டு உரிமையாளர் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் உள்ள தில்சுக்நகரில் வசித்து வந்தவர் அனுராதா ரெட்டி (55). இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இவரை கைவிட்டுவிட்டார். இதனால் சந்திரமோகன் (48) என்பவரது வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வந்தார். அதோடு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.

சமீபத்தில் அனுராதா திடீரென காணாமல் போனார். அதேசமயம் அங்குள்ள சாக்கடை ஒன்றில் பெண் ஒருவரின் தலை மட்டும் கிடப்பதை பார்த்த துப்புரவு தொழிலாளி, இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனே இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போது கண்டுபிடிக்கப்பட்ட தலை காணாமல் போன அனுராதாவுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. 

Hyderabad

இது குறித்து போலீஸ் அதிகாரி ருபேஷ் கூறுகையில், “பெண்ணின் தலை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது சந்திரமோகன் பிளாஸ்டிக் பேக்கில் கொண்டு வந்து தலையை போடுவது தெளிவாக பதிவாகி இருந்தது. உடனே அவரை பிடித்து விசாரித்த போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பகுதிகள் வீட்டில் இருந்த பிரிட்ஜில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சந்திர மோகனுக்கும், அனுராதாவிற்கும் இடையே 10 ஆண்டுகளாக ரகசிய தொடர்பு இருந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனுராதாவை அவரது கணவர் விட்டுவிட்டு சென்றதும், சந்திரமோகன் வீட்டின் கீழ் தளத்தில் ஒரு பகுதியில் வந்து வசிக்க ஆரம்பித்தார். இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

Hyderabad

அனுராதாவிடம் கடந்த 2018-ம் ஆண்டு சந்திரமோகன் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். அந்த கடனை திரும்ப கொடுக்கும்படி அனுராதா பல முறை கேட்டும் சந்திரமோகன் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் கடனை ஒரே அடியாக திரும்ப கொடுக்காமல் இருக்க அனுராதாவை தீர்த்துக்கட்ட சந்திரமோகன் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார். கடந்த 12-ம் தேதி பணப்பிரச்னையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் அனுராதாவை சந்திரமோகன் கத்தியால் குத்திக்கொலை செய்தார். பின்னர் கடையில் இருந்து கட்டிங் மெஷின் வாங்கி வந்து தலையை தனியாக வெட்டி எடுத்தார். அதோடு கால் மற்றும் கைகளை வெட்டி பிரிட்ஜில் வைத்தார். உடலின் மற்ற பகுதியை டிராலி ஒன்றில் வைத்திருந்தார். உடல் அழுகிப்போன வாசனை வெளியில் வராமல் இருக்க நறுமண ஸ்பிரே அடித்துள்ளார். தலையை மட்டும் பிளாஸ்டிக் பேக்கில் வைத்து எங்காவது போடுவதற்கு எடுத்துச்சென்றார். ஆனால் வழியில் சாக்கடையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். அனுராதா உயிருடன் இருக்கிறார் என்பதை தெரிவிக்க அனுராதாவின் மொபைல் மூலம் அவருக்கு தெரிந்தவர்களுக்கு மெசேஜும் அனுப்பிக்கொண்டிருந்தார் என்று தெரிவித்தார்.

From around the web