தொகுதி மறுவரையறை.. நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுத்த கனிமொழி எம்.பி.!!

 
Kanimozhi

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தற்போதுள்ள தொகுதி எண்ணிக்கையையே அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இது குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார் கனிமொழி எம்.பி.

சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற கூட்டுக்குழு கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் 7 மாநில எம்.பி.க்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். அனைத்து நாடாளுமன்ற விதிமுறைகளையும் பயன்படுத்தி தொகுதி மறுவரையிறையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் கனிமொழி எம்.பி. இந்த நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.