மதுகுடிப்பது குறித்து உயர் அதிகாரியிடம் புகார்... ஆத்திரத்தில் சக போலீசார் 2 பேரை சுட்டுக்கொன்ற போலீஸ்..!

 
Mizoram

மிசோரமில் மதுகுடிப்பது குறித்து உயர் அதிகாரியிடம் புகார் அளித்த சக போலீசார் 2 பேரை போலீஸ்காரர் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிசோரம் மாநில காவல் துறையில் பணியாற்றி வருபவர் பிமல் கண்டி சுக்மா (56). இவர் மிசோரம் - அசாம் எல்லையில் உள்ள புர்சப் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியாற்றி வருகிறார். அந்த சோதனைச்சாவடியில் லால்ரவ்லா மற்றும் இந்திரகுமார் ராய் ஆகிய மேலும் 2 போலீசாரும் பணியாற்றி வந்தனர். 

Gun

இதனிடையே, பிமல் சுக்மாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதை சக போலீசார் இரண்டு பேரும் விமர்சித்து வந்துள்ளனர். மது குடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வந்த நிலையில், பிமல் சுக்மா மது குடிப்பது குறித்து சக போலீசார் 2 பேரும் உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த பிமல் தன் மீது புகார் அளித்த சக போலீசார் லால்ரவ்லா, இந்திரகுமார் இருவர் மீது இன்று தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Kerala-youth-arrested-for-molesting-female-doctor

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட அருகில் இருந்த சக போலீசார் விரைந்து வந்து பிமல் சுக்மாவிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர். மது குடிக்கும் பழக்கம் குறித்து உயர் அதிகாரியிடம் புகார் அளித்ததால் சக போலீசார் 2 பேரை போலீஸ் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web