ராமர் கோவிலின் நினைவு தபால் தலைகள்.. வெளியிட்டார் பிரதமர் மோடி!

 
Stamp

ராமர் கோவில் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

stamp

அதன் ஒரு பகுதியாக, ராமர் கோவில் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் இன்று வெளியிட்டுள்ளார். ராமர் கோவிலை குறிப்பிடும் வகையிலான ராமர் கோவில், கணேஷ், ஹனுமான், ஜடாயு, கேவத்ராஜ் மற்றும் மாஷப்ரி உள்ளிட்ட 6 தபால் தலைகள் உள்ளன. ராமர் கோவில், சவுபை 'மங்கள் பவன் அமங்கல் ஹரி', சூரியன்,  சரயு நதி, கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள சிற்பங்களும் இந்த தபால் வடிவமைப்பின் கூறுகளாகும்.

சூரியக் கதிர்களை விவரிக்கும் தங்க இலைகள் மற்றும் முத்திரைகளில் இடம் பெற்றிருக்கும் சவுபை ஆகியவை முத்திரைகளுக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கின்றன. பஞ்சபூதங்கள் என அழைக்கப்படும் வானம், காற்று, நெருப்பு, பூமி மற்றும் நீர் ஆகிய ஐந்து கூறுகள், இந்த தபால்களில் பல்வேறு வடிவமைப்புகளின் மூலம் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.


48 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் ஐ.நா.சபை, அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா, கம்போடியா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் வெளியிட்ட தபால் தலைகள் இடம் பெற்றுள்ளன.

From around the web