கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சைப் பேச்சு.. ம.பி. அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!

 
Vijay Shah

கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷாவுக்கு எதிரான வழக்கில் இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

கர்னல் சோபியா குரேஷி குறித்த மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டித்துள்ளார்.

இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி குறித்த மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், அமைச்சரின் கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை மற்றும் பொறுப்பற்றவை என்று தெரிவித்தார், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“ஒரு நாளில் உங்களுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.” என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், கைது செய்யப்படுவதிலிருந்து இடைக்காலத் தடை கோரிய விஜய் ஷாவின் மனுவையும் நிராகரித்தது. மேலும், விஜய் ஷாவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முன்னதாக, எதிர்க்கட்சிகள், ராணுவ வீரர்கள் மற்றும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சில நிர்வாகிகளிடமிருந்துகூட பரவலான விமர்சனங்களைப் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக, அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

 

 

From around the web