பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 7-ம் வகுப்பு மாணவி சுருண்டு விழுந்து பலி.. கேரளாவில் சோகம்!

 
kerala

கேரளாவில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடிய 7-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் ஆர்ப்பூக்கரையில் செயின்ட் பிலோமினா பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவி திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார்.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Running

கோட்டயம் கரைப்புதட்டைச் சேர்ந்த லால் சி லூயிஸ் என்பவரின் 12 வயதுடைய மகள் கிறிஸ்டல் சி லால், கிரிஸ்டல் ஆர்ப்பூக்கரையில் உள்ள செயின்ட் பிலோமினா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

Dead-body

இந்நிலையில், பள்ளியில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற போது, மாணவி ​​கீழே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் கோட்டயம் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், கிறிஸ்டலுக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை தரப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி கிரிஸ்டல் உயிரிழந்தார்.

From around the web