வீட்டுப்பாடம் முடிக்காத 6-ம் வகுப்பு மாணவன்.. கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. தெலுங்கானவில் அதிர்ச்சி சம்பவம்

 
Telangana Telangana

தெலுங்கானாவில் வீட்டுப்பாடம் முடிக்காத மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டம் கொல்லாகுடெம் பகுதியில் மானச விகாஸ் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சதீஷ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டுப்பாடம் முடிக்காத 6-ம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

beaten

வீட்டிற்கு வந்த மாணவனின் உடலில் இருந்த காயத்தை பார்த்த பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது பள்ளியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கியது தெரிய வந்தது. 

இதையடுத்து ஆசிரியர் சதீஷ் மீது மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

From around the web