5-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. போக்சோவில் முதியவர் கைது!

 
Rape

மேற்கு வங்கத்தில் முதியவர் ஒருவர் 5-ம் வகுப்பு சிறுமியை ஒரு மாத காலமாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர், 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு மாத காலமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் தரப்பில் வெளியான தகவலின்படி, டார்ஜிலிங் மாவட்டத்தின் கோரிபாரி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

Rape

இதில், பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்ததை தன் தாயிடம் கூறியதையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில், குற்றம்சாட்டப்பட்ட முதியவர் மீது கடந்த திங்களன்று போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரியொருவர் கூறுகையில், “எஃப்.ஐ.ஆர் படி, சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தபோது இந்தச் சம்பவங்கள் நடந்தன. குற்றம்சாட்டப்பட்ட உள்ளூர்வாசியான முதியவர், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு ஒவ்வொரு முறையும் சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்திருக்கிறார்.

arrest

மேலும், பாலியல் வன்கொடுமை செய்ததைப் பற்றி, வெளியில் யாரிடமாவது கூறினால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவேன் எனச் சிறுமியை அவர் மிரட்டியிருக்கிறார். தற்போது இதில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மருத்துவ பரிசோதனைக்காக வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பப்பட்டிருக்கிறார்” என்று கூறினார்.

From around the web