மாரடைப்பால் உயிரிழந்த 3-ம் வகுப்பு மாணவி பலி.. விளையாடிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த சோகம்!

 
Lucknow

உத்தர பிரதேசத்தில் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது 9 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தனியாருக்கு சொந்தமான பள்ளியில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்தது. பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர். இந்த வேளையில் 9 வயது நிரம்பிய 3-ம் வகுப்பு மாணவி மான்வி சிங்கும் தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தார். 

Dead

இந்த நிலையில் திடீரென்று மாணவி பள்ளி விளையாட்டு மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதுகுறித்து உடனடியாக சக மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆசிரியர்கள் மான்வி சிங்கை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அதன்பிறகு மாணவி மான்வி சிங்கை அவரது பெற்றோர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மாணவி மான்வி சிங் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவி மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் கூறியது மாணவியின் பெற்றோரை அதிர்ச்சியடைய செய்தது. 

Police

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், மைதானத்தில் விளையாடியபோது 9 வயது நிரம்பிய 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மயங்கினார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் போலீசாரின் கவனத்துக்கு சென்றது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

From around the web