2-ம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த பள்ளி நிர்வாகம்.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

 
Uttar Pradesh

உத்தரபிரதேசத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவரை பள்ளி நிர்வாகமே நரபலி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், டிஎல் பப்ளிக் பள்ளி இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் ஜசோதன் சிங். அவரது மகன் தினேஷ் பாகல் அந்த பள்ளியின் இயக்குநராக உள்ளார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவரான க்ரிடார்த் என்பவரின் தந்தைக்கு, பள்ளி நிர்வாகம் தொடர்புகொண்டு, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், பள்ளியின் இயக்குநர் காரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

boy-dead-body

அதிர்ச்சியடைந்து வந்த தந்தைக்கு, க்ரிடார்த் இறந்துவிட்டார் என கூறப்பட்டுள்ளது. சந்தேகம் அடைந்த தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. ஜசோதன் சிங்க்கு சூனியம் மற்றும் நரபலிகளில் நம்பிக்கை உள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி நன்றாக செயல்பட வேண்    டும் என்பதற்காக அந்த சிறுவனை நரபலி கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சிறுவனை கொல்வதற்காக அவரை விடுதியில் இருந்து பள்ளி இயக்குநர் வெளியே அழைத்து வந்தபோது, அந்த சிறுவன் கத்தியுள்ளார். அந்த சிறுவன் சத்தம் போடுகிறார் என்பதற்காக அந்த சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்கள். இந்த தகவல்கள் கிடைத்ததையடுத்து, ஜசோதன் சிங், தினேஷ் பாகல் மற்றும் 3 ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

Uttar Pradesh

ஏற்கனவே கடந்த செப்டம்பர் 6-ம் தேதி வேறு ஒரு சிறுவனை நரபலி கொடுக்க இவர்கள் திட்டமிட்டதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டதாகவும் குற்றவாளிகள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்கள்.

From around the web