மத்தியபிரதேசத்தில் 11-ம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் பலி.. மனதை உலுக்கும் கடைசி நிமிட வீடியோ!!

 
MP

மத்தியபிரதேசத்தில் 11-ம் வகுப்பு மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாக வேண்டிய வயசா இது என்று தமிழில் ஒரு வாக்கியம் சொல்லுவார்கள். இளம் வயதில் யாராவது மரணம் அடைந்தால் இந்த வாக்கியத்தை பயன்படுத்துவது வழக்கம். இந்தியாவில் தற்போது அடிக்கடி இது போன்ற மாரடைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக இளைஞர்கள் பலர் இது போன்ற மாரடைப்பு காரணமாக திடீர் திடீரென மரணம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

MP

அந்த வகையில், 11-ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து உள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் புகழ்பெற்ற மகாகாளேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், பஞ்சமி தின விழாவில் நடந்த நிகழ்ச்சியில், மயங்க் என்ற 17 வயது பள்ளி மாணவர், வாள்வீச்சு சாகசம் செய்து காட்டியுள்ளார்.

பின்பு வீட்டிற்கு சென்று மயக்கமடைந்த நிலையில் கிடந்த அவரை, உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் மயங்க் இறப்பதற்கு முன்பு வாள்வீச்சு சாகசம் செய்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

From around the web