10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
மகாராஷ்டிராவில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் போது மாணவியை ஆட்டோவில் வைத்து அதன் டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஓம்கார் நகர் பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆட்டோ டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வைரலான வீடியோவில் பதிவாகியுள்ளது. பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் போது, ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி, பின்னால் அமர்ந்திருந்த மாணவியை ஆட்டோ டிரைவர் துன்புறுத்த ஆரம்பித்துள்ளார்.
மாணவியிடம் அவர் தவறாக நடந்து கொண்ட இந்த அதிர்ச்சி சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்ததுடன், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ பரவிய சில மணி நேரங்களிலேயே ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
#Maharashtra #Nagpur | An auto driver, who was taking a student home from school by auto, sexually assaulted the student. The student was begging him with folded hands. Still the auto driver was forcing her. All this was captured by a woman from the window of her house.
— Siraj Noorani (@sirajnoorani) May 9, 2024
1/2 pic.twitter.com/5KohSZ3Ami
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைசூரில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி, நீதிமன்ற எழுத்தராக பணிபுரியும் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.