10-ம் வகுப்பு மாணவி பரிதாப பலி.. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்!

 
Kerala

கேரள மாநிலத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி மைசுருக்கு சுற்றுலா வந்த இடத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முண்டோலி நகரைச் சேர்ந்த ஸ்ரீ சயனா (15). இவர் எம்என்கேஎம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி பள்ளியில் இருந்து 3 பேருந்துகளில் 135 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் மற்றும் ஒரு பெற்றோர் உள்பட மொத்தம் 150 பேர் கொண்ட குழு மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளது.

நேற்று இரவு பிருந்தாவன் தோட்டத்தில் நீரூற்று நிகழ்ச்சியை பார்த்துவிட்டு சுற்றுலா பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ சயனா தரையில் விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Dead-body

இந்த சம்பவத்திற்கு பிறகு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்களைத் தவிர, அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பாலக்காடு திரும்பினர். இந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை சலினா பீவி கூறுகையில், மாணவிகள் பிருந்தாவன் தோட்டத்தில் இருந்து நீரூற்று நிகழ்ச்சியை பார்த்துவிட்டு சுற்றுலா பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​திடீரென வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ சயனா தரையில் விழுந்தார். ஆசிரியர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் அவரை கவனிக்கவில்லை. ஸ்ரீ சயனா பின்னர் சந்திரகலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரது எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) பதிவு செய்யப்பட்டது, அவரது மரணம் உறுதிசெய்யப்பட்டது.

Police

அவள் இப்போது இல்லை என்று நாங்கள் நம்பவில்லை, அவளைக் காப்பாற்றும் நம்பிக்கையில் வேறு மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால் அவர் 30 நிமிடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக மூன்றாவது மருத்துவமனை எங்களுக்குத் தெரிவித்தது. பின்னர் அவரது சடலத்தை கே.ஆர் அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு மாற்றினோம், மேலும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தோம் என்று கூறினார்.

From around the web