10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தாய் திட்டியதால் விபரீதம்!

 
Phone

மத்திய பிரதேசத்தில் தாய் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா லோகாண்டே (16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் மொபைல் போனை அதிகம் பார்க்கும் பழக்கம் உடையவர். இதையடுத்து நேற்று வழக்கம்போல் அனைவரும் சாப்பிடும்போது ஹேமா மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தார்.

suicide

இதனைக் கண்ட ஹேமாவின் தாய், போனை வைத்துவிட்டு சாப்பிடு என்று கண்டித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த ஹேமா, மொபைல் போனை எடுத்துக்கொண்டு வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரணம் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Police

காவல் நிலையப் பொறுப்பாளர் கூறுகையில், ஹேமா லோகண்டே சிறிய விஷயங்களுக்குகூட கோபப்படுவதாகவும், அளவுக்கு அதிகமாக மொபைல் போனைப் பயன்படுத்துவதாகவும், விசாரணையின்போது அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

From around the web