விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்... பாய்ந்து குதறிய தெரு நாய்கள்... 12 வயது சிறுவன் பலி.!

 
Bareilly

உத்தர பிரதேசத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிபி கஞ்ச் பகுதியில் கானா கவுந்தியா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அயான் (12) என்ற சிறுவன் விசத்து வந்தான். இந்த சிறுவன் நேற்று தனது நண்பர்களுடன் வழக்கம் போல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். 

அப்போது திடீரென தெருநாய்கள் சிறுவர்களை தாக்கியது. சிறுவர்கள் நாய்களுக்கு பயந்து ஓடினர். சிறுவன் அயான் ஓடும்போது தரையில் விழவே, தெருநாய்கள் அவன் மீது பாய்ந்து கடித்தன. இந்த கொடூர தாக்குதலில் சிறுவன் படுகாயம் அடைந்தான். 

Dogs

அப்போது அந்த வழியாக சென்றவர்கள், சிறுவனை நாய்களிடமிருந்து மீட்டனர். உடனடியாக அவர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிறுவன் அயான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நாய்கள் தாக்குதலில் மற்றொரு குழந்தையும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

பரேலியில் தெருநாய்கள் குழந்தைகளைத் தாக்குவது இது முதல் முறையல்ல. இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி தெருநாய்கள் தாக்கியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

boy-dead-body

நகரில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு பலமுறை கடிதம் எழுதியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

From around the web