வட இந்தியாவில் பிரபலமாகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு!!
தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் கல்வி நிதி மறுக்கப்பட்ட நிலையில் மும்மொழிக் கொள்கை vs இருமொழிக் கொள்கை நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளானது. மேலும் தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்னிந்திய மாநிலங்களுடன் மே.வங்கம், ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களை ஒருங்கிணைத்து ஒன்றிய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதும் தமிழ்நாடு குறித்து நாள் தோறும் விவாதங்களை வட மாநிலங்களில் ஏற்படுத்தி வருகிறது.
வடக்கு ஊடகங்களில் மட்டுமல்லாமல் சமூகத்தளங்களிலும் தமிழ்நாடு குறித்த செய்திகள் இந்தியிலே வரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டுத் திட்டங்களை பட்டியலிட்டு இந்தியில் விவரிக்கும் வீடியோ ஒன்று சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம், நியோ டைடல் பார்க், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், இன்னுயிர் காப்போம் ஆகிய திட்டங்களின் சிறப்புகளை இந்தி மொழியில் விவரித்துப் பாராட்டும் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
நிச்சயம் இத்தகைய வீடியோக்கள் வட மாநில அடித்தட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
இந்தியாவின் சிறந்த மாடல் pic.twitter.com/X4OqMlQl6Z
— Jai Samvidhan/அரசியலமைப்பு வாழ்க (@Jai__Samvidhan) March 19, 2025
