மின்மாதிரி கார் ஓட்டும் பந்தயத்தில் சென்னை இளைஞர் சாதனை! 

 
Sai

மும்பையில் நடைபெற்ற மின்மாதிரி கார் பந்தயத்தில் சென்னையைச் சேர்ந்த சாய் பிருத்வி என்ற 23 வயது இளைஞர் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.

தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலக்கட்டத்தில் கார் ரேஸ் புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. சோழாவரம் கார் பந்தய மைதானத்தில் ஓட்டும் அதே பந்தய அனுபவத்தை இணையம் மற்றும் மாதிரி காருடன் பெற முடியும்.

கார் பந்தயத்தில் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்றவர்கள்  இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம். 

Sai

நேரடி மைதானத்தில் வீரர்கள் எப்படி மதிப்பீடு செய்யப்படுவார்களோ அதே அடிப்படையில் காரின் டயர் தேய்மானம், பெட்ரோல் செலவீனம், ப்ரேக் பயன்பாடு, நுழைவு, வெளியேறுதல் வேகம் என அனைத்து குறியீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.

ஜி.டி. ஃபெராரி என பந்தயக்கார்களின் மாதிரிகளும்  இந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, நேரடி கார் பந்தயங்களில் பங்கேற்க முடியாதவர்களுக்கு அதே அனுபவத்தைத் தருகிறது இந்த மின்மாதிர் கார் பந்தயம் மிகப்பெரிய வாய்ப்பாகும்.
அகில இந்திய அளவில் இஸ்போட்ஸ் நிறுவனம் இந்த மின்மாதிரி கார் பந்தயத்தை நாடு தழுவிய அளவில் நடத்துகிறது. மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்ற சென்னை இளைஞர் சாய் ப்ருத்வி இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

சாய் பிருத்வி ஏற்கனவே பல நேரடி கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

கால மாற்றத்திற்கு ஏற்ப விளையாட்டுப் போட்டிகள் புதுப்புது வடிவம் பெற்றும் வரும் வேளையில்  தமிழ்நாட்டு இளைஞர்கள் இத்தகைய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருவது பெருமைக்குரியதாகும். 

தமிழக இளைஞர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்துவரும் வேளையில் சாய் பிருத்வியின் இந்த மின்மாதிரி கார் பந்த்யா வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.

From around the web