துரோகம் செய்த கள்ளக்காதலன்.. ஆத்திரத்தில் ஆணுறுப்பை வெட்டிய காதலி... உத்தரப்பிரதேசத்தில் பகீர் சம்பவம்!!

 
Private parts

உத்தரப்பிரதேசத்தில் தனக்கு துரோகம் செய்த கள்ளக்காதலனின் அந்தரங்க உறுப்பை காதலி துண்டித்தள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜகாங்கிராபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராம் ஒன்றில், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கை இருவருக்கும் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு தனது மாமியார் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

Affair

பின்னாளில் இந்த நட்பு கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் ஊரை விட்டு வெளியேறி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பாக கள்ளக் காதல் ஜோடிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு வாரத்திற்கு முன்பாக மீண்டும் தன் கணவரின் வீட்டிற்கு வந்த அந்தப் பெண், கணவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். 

இருப்பினும், தனக்கு துரோகம் செய்ததாக கருதி ஆண் நண்பர் மீதான கோபம் அந்த பெண்ணுக்கு குறையவில்லை. இந்நிலையில் கடந்த திங்களன்று பிரிந்து சென்ற கள்ளக் காதலன் பெண்ணின் வீட்டிற்கு ரகசியமாக வந்து, உறவு கொள்ளுமாறு வற்புறுத்தத் தொடங்கினார். அவர் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த காதலி, கூர்மையான ஆயுதத்தால் கள்ளக்காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டினார்.

Police

இதனால் அலறித் துடித்த அந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக ஜஹாங்கிராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்தரங்க உறுப்பை துண்டித்து தப்பியோடிய பெண்ணை தேடி வருகின்றனர்.

From around the web