டோல் கட்டண வசூலில் மாற்றம்.. புதிய முறையை வெளியிட்டது ஒன்றிய அரசு!

 
Toll Booth

வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பான புதிய முறையை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் பெரிய மாற்றத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட நெடுஞ்சாலையில் நீங்கள் பயணிக்கும் தூரம் வரையிலான கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும், தற்போதுள்ள நடைமுறைப்படி முழுமையான சாலைக்கான கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது.

தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் குத்தகை பெற்ற நிறுவனங்கள் அதற்காக வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணங்களை வசூலிக்கின்றன. தற்போது இந்தியாவில் சுங்க கட்டண வசூல் முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. உதாரணமாக குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (GNSS) அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Toll booth

இதன்படி செயற்கைக்கோள் வாயிலாக பயண தூரத்தை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் முறையை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக 2008-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, வாகனங்களில், செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆன்-போர்டு யூனிட் எனப்படும் சிறிய ஓ.பி.யு. கருவி வெளிப்புறத்தில் பொருத்தப்படும்.

இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனம், சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணிக்கும்போது, நாள் ஒன்றுக்கு, முதல் 20 கி.மீ.க்கு கட்டணம் கிடையாது. அதன்பிறகு பயணிக்கும் தூரம், செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு, 'பாஸ்டேக்' போலவே வங்கிக்கணக்கில் இருந்து சுங்க கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

Toll-booth

ஓ.பி.யு. கருவி வாயிலாக ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோளுடன் இணைப்பு ஏற்பட்டு வாகன பயண தூரம் பின்தொடரப்படும். குறிப்பிட்ட தொலைவுகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளும் செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்படும். ஓ.பி.யு. சாதனம் நாளடைவில் அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்படும்போது சுங்கச்சாவடிகள் தேவையற்றதாகி விடும். அப்போது வாகனங்கள் இடையூறின்றி பயணிக்க முடியும். சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி வசிக்கும் மக்கள் தினமும் 20 கி.மீ.வரை கட்டணமின்றி சென்றுவர வாய்ப்பு ஏற்படும்.

ஆன்-போர்டு யூனிட் (ஓ.பி.யு.) என்ற சிறிய கருவியை, பாஸ்டேக் போலவே, அரசு இணையதளங்களில் வாங்கலாம். புதிதாக விற்பனைக்கு வரக்கூடிய வாகனங்களில் தயாரிப்பு நிறுவனங்களே இதனை பொருத்தி விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From around the web