CBSE 12-ம் வகுப்பு முடிவுகள் வெளியானது.. 87.98 சதவீதம் பேர் தேர்ச்சி!

 
Result

இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) ப்ளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், தமிழ்நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் இந்த தேர்வினை எழுதினர். வரும் 20-ம் தேதிக்கு பிறகு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என சிபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

CBSE

இந்த நிலையில், நாடு முழுவதும் முன்கூட்டியே சிபிஎஸ்இ ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் www.cbse.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

results

கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 87.33 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 87.98 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மண்டலத்தின் தேர்ச்சி விழுக்காடு 98.47 சதவீதமாக உள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் ஒருசில தினங்களில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.   

From around the web