டெலிப்ராம்டர் இல்லாமல் பிரதமர் மோடியால் பேச முடியாதா? காங்கிரஸ் கேள்வி!!

 
Modi

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை வெளியிட்டுள்ள கேரள காங்கிரஸ், டெலிப்ராம்டர் ஆப்பரேட்டர் மற்றும் ஸ்கிரிப்ட் எழுதுபவர்களின் கட்டுப்பாட்டில் தான் மோடி இருக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடியின் 34 நொடிகள் வீடியோவை பகிர்ந்துள்ளனர். மூன்று நொடிகள் பிரதமர் பேசும் வீடியோ உள்ளது அதைத் தொடர்ந்து 30 நொடிகள் மோடி எதுவும் பேசவில்லை. இந்த வீடியோவைக் குறிப்பிட்டு,

”பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் போதே டெலிப்ராம்டர் நின்று விட்டது. டெலிப்ராம்டர் இல்லாமல் மோடியால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. மோடி தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்று மக்கள் நினைக்கின்றனர். உண்மையில் பிரதமர் மோடி, டெலிப்ராம்டர் ஆப்பரேட்டர் மற்றும் உரை எழுதுபவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளார்” என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


கடந்த காலத்தில் பன்னாட்டு மாநாடு ஒன்றில் பிரதமர் மோடி பேசிய போது டெலிப்ராம்டர் பிரச்சனையால் அவருடைய பேச்சு தடைபட்டது நினைவிருக்கலாம்.

From around the web