பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படுமா? வெளியான அதிர்ச்சி தகவல்

 
panni puri

கர்நாடகாவில் பானி பூரிக்குப் பயன்படுத்தப்படும் சாஸ், மீட்டா காரா பவுடர் என ஐந்து வகையான பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய உலகத்தில் ரோட்டு கடையில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக பானி பூரி கடையில் பெரும்பாலான மக்கள் கிடையாக கிடக்கின்றனர். ஆனால் அதன் பின் விளைவுகள் குறித்து யாரும் யோசிப்பதில்லை. இப்படி இருக்கையில் உணவு பாதுகாப்பு துறை சில உணவுப் பொருட்களை பான் செய்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் கேன்சர் உண்டாக்கும் பொருட்கள் இருப்பதாக கூறி பான் செய்தனர்.

அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பானி பூரியை மாதிரிகளைச் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர துறையினர் சேகரித்து ஆய்வு நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த ஆய்வில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது  பானி பூரி தயாரிக்க தேவைப்படும் பொருட்களில் முக்கியமானவையாக சாஸ் மற்றும் மீட்டா பவுடர் கருதப்படுகிறது. 

Pani Puri

அப்படி பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களில் தான் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. எனவே இதை உண்டால் மனிதனுக்கு கண்டிப்பாக தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள 49 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பானி பூரி தயாரிப்பில் புற்றுநோயை உண்டாக்கும் சாஸ் மற்றும் மீட்டா பவுடர் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ​​“பானி பூரி குறித்து ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 243 மாதிரிகளை சேகரித்துள்ளோம். 41 மாதிரிகள் பாதுகாப்பற்றவை என்று கண்டறியப்பட்டது. அத்துடன் 18 மாதிரிகள் தரமற்றவை என்றும் தெரிய வந்துள்ளது.

Srinivas

மேலும் பானிபூரியில் 4-5 ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் மற்றும் துறை முதன்மை செயலாளரிடம் பேசி முடிவெடுக்கப்படும். 4-5 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. அது வந்த பின், கூட்டம் நடத்தி, பானி பூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.

பானி பூரியில் பயன்படுத்தப்படும் காரா மற்றும் மிட்டாவில் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிக காரம் சாப்பிடுவதால் அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பானிபூரியை 5-7 வருடங்கள் சாப்பிட்டு வந்தால் அல்சர், புற்று நோய் வரும்” என்றார்.

From around the web