வாங்க.. வந்து கஞ்சாச் செடி வளருங்க! அழைப்பு விடுக்கும் அரசு எது தெரியுமா?

 
Kanja

போதைப் பொருளான கஞ்சா வைத்திருப்பதும் வளர்ப்பதுவும் தமிழ்நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வப்போது கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்களும், விற்பனை செய்பவர்களும் கைதாகும் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் இன்னொரு மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் கஞ்சா செடி வளர்ப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. பொறுங்க பொறுங்க... இது பொதுமக்களுக்கான அனுமதி கிடையாது. தொழில், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த அனுமதி வழங்கப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

From around the web