மின்கம்பியில் உரசிய பேருந்து.. தீயில் கருகி 10 பேர் பலி.. திருமண நிகழ்வுக்கு சென்ற போது நேர்ந்த சோகம்!

 
UP

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து உயரழுத்த மின் கம்பி மீது உரசி தீப்பிடித்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் இன்று, தனியார் பேருந்து ஒன்று 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மர்தா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பர்ஹி பகுதியில் வந்தபோது, மேலே இருந்த உயரழுத்த மின் கம்பி மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்து திடீரென தீப்பிடித்தது.

UP

இந்த தீ சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் இருந்த சிலர் இந்த காட்சிகளை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் கரும்புகையுடன் பேருந்து எரிந்து கொண்டிருப்பதை காணமுடிகிறது. பேருந்து விபத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தில் மேலும் பல பயணிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.


அந்த பேருந்து மும்பையில் இருந்து வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்மவ மர்தா காவல் நிலைய போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து அறிந்த அம்மாநில முதல்வர் யோகி, ஆதித்யநாத், மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

From around the web