1.43 லட்சம் சீட் கார்டுகளை வைத்து கட்டப்பட்ட உலகில் மிக பெரிய கட்டிடம்.. உலக சாதனைப் படைத்த 15 வயது இந்திய சிறுவன்!

 
Arnav

மேற்கு வங்கத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் 1 லட்சத்திற்கும் அதிகமான கார்டுகளை கொண்டு சாதனைப் படைத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சிறுவன் அர்னவ் தாகா (15). இவர் தன்னுடைய 8 வயதில் இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமுடன் இருந்துள்ளார். அன்றைய நாளிலிருந்து அட்டை பெட்டிகள் மற்றும் சீட்டு அட்டைகளை வைத்து புதுவிதமாக வடிவமைப்புகளை உருவாக்கி விளையாடுவது வழக்கம். 

இந்த நிலையில் தான் கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்த நேரத்தில், ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என முயற்சித்துள்ளார். அப்போது தான் 1.43 லட்சம் சீட்டு விளையாடும் அட்டைகளை வைத்து பெரிய வடிவமைப்பில் கட்டிடங்களை கட்டுவதற்கு முயற்சி எடுத்துள்ளார். உடனே இந்த வெற்றி கிடைத்துவிடவில்லை. 

Arnav

பலமுறை மீண்டும் மீண்டும் கீழே விடும் சீட்டுக்கட்டைகளை அடுக்கி வைத்து புதுவிதமான கட்டிடங்களை கட்டுவதற்கு முயற்சி எடுத்துள்ளார். இதன் பலன் தான் அர்னவ், கொல்கத்தா நகரத்தின் நான்கு மக்காவோ ஹோட்டல்களின் தோற்றத்தினை உருவாக்கினார். இது மூலம் உலக சாதனைப் படைத்துள்ளார். சுமார் 40 அடி நீளம், 11 அடி 4 அங்குல உயரம் மற்றும் 16 அடி 8 அங்குல அகலம் அளவு கொண்டதாக வடிவமைப்பதற்கு இவர் 41 நாள்களை செலவிட்டுள்ளார். 

முக்கியமாக இவர் கார்டுகளை அடுக்க டேப், கம் போன்ற எவற்றையும் பயன்படுத்தாதது தான் இதன் சிறப்பு. இருந்தப்போதும் சீட்டுக்கட்டுகளை அடுக்குவதற்கு முன்னதாக அவுட்லைன் வரைந்துள்ளார். இதுக்குறித்த வீடியோ ஒன்று தான் தற்போது யூடியூப்பில் பகிரப்பட்டுள்ளது.

இதில் அர்னவ் எட்டு வயதில் இருந்தே கார்டுகளை வைத்து புதிய வடிவங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் எனவும், இந்த முயற்சி தான் கின்னஸ் உலக சாதனையை பட்டத்தைப் பெறுவதற்கு உதவியாக இருந்துள்ளது என்றார். மேலும் எவ்வாறு சீட்டுகளை அடுக்கி வைக்கிறார்? என்பது குறித்து வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த குறிப்பிட்ட சாதனையை அமெரிக்காவை சேர்ந்த பிரையன் பெர்க் வைத்திருந்தார். சுமார் 10.39 மீ நீளம், 2.88 மீ உயரம் மற்றும் 3.54 மீ அகலம் கொண்ட மூன்று மக்காவோ ஹோட்டல்களின் பிரதியை அவர் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web