சத்தீஸ்கரில் கொடூர தாக்குதல்... பாதுகாப்பு படையினர் 11 பேர் உயிரிழந்த சோகம்!!

 
Chhattisgarh

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள அரன்பூர் சாலையில் இன்று பிற்பகல் ரோந்து சென்ற குழுவினர் மீது  மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில்  மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்த நிலையில், அங்கு சிறப்பு காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுட்டனர். 

தேடுதலை தொடர்ந்து ராணுவத்தினர் திரும்பிய போது மாவோயிஸ்ட்டுகள் ஐஇடி வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 11 சிறப்பு காவல் படை வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

Chhattisgarh

உயிரிழந்தவர்கள் சத்தீஸ்கர் காவல்துறையின் சிறப்புப் படையான மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி)யைச் சேர்ந்தவர்கள், மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பயிற்சி பெற்ற உள்ளூர் பழங்குடியினரை உள்ளடக்கியவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் உயிரிழந்த 11 ராணுவ வீரர்களுக்கு அம்மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் வீரர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது என பூபேஷ் பாதல் தெரிவித்துள்ளார்.


60 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்ற அரசாங்கத்திற்கு எதிராக நக்சல்கள் என்றும் அழைக்கப்படும் மாவோயிஸ்டுகள் ஆயுதமேந்திய கிளர்ச்சியை நடத்தி வருகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து விடுபட்ட ஏழை மக்களின் சார்பாக தாங்கள் போராடுவதாக அவர்கள் கூறி உள்ளனர்.

From around the web