மார்பக புற்றுநோய் பாதிப்பு.. முன்னாள் பெமினா மிஸ் இந்தியா திரிபுரா ரிங்கி சக்மா மரணம்!

 
Rinky Chakma

முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா ரிங்கி சக்மா புற்றுநோயால் நேற்று காலமானார். அவருக்கு வயது 28.

2017-ம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா திரிபுரா பட்டத்தை வென்றவர் ரிங்கி சக்மா. கடந்த 2022-ம் ஆண்டு முதல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட இவர் ஆரம்ப கட்டத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் புற்றுநோய் அவரது நுரையீரல் மற்றும் மூளைக்கு பரவி, மூளையில் கட்டிக்கு வழிவகுத்தது.

Rinky Chakma

கடந்த மாதம் 22-ம் தேதி உடல்நிலை மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஐசியூவில் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயின் காரணமாக அவரது நுரையீரல் ஒன்று கிட்டத்தட்ட செயல்படாமல் இருந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள் திவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரிங்கி சக்மாவின் மரணம் குறித்து ஃபெமினா மிஸ் இந்தியா சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையைப் பகிரப்பட்டுள்ளது. சக்மாவின் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், ‘இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.’ என்று பதிவிட்டுள்ளது.

A post shared by Femina Miss India (@missindiaorg)

பல வாரங்களுக்கு முன்பு, ரிங்கி இன்ஸ்டாகிராமில் தனது அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. ரிங்கியின் மறைவிற்கு நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web