பிரம்மோஸ் ஏவுகணை காங்கிரஸ் ஆட்சியின் சாதனை! ஜெய்ராம் ரமேஷ்!!

 
Bramhos

இந்தியா - பாகிஸ்தான் போர் இரு தரப்பிலும் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இரு தரப்பினரும் தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறிக் கொள்கின்றனர். பிரதமர் மோடி இது இந்திய ராணுவத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார். ஏவுகணை தாக்குதல்கள் மூலம் தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.

இந்நிலையில் மன்மோகன் சிங் ஆட்சியில் தான் பிரம்மோஸ் ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

”பிரம்மோஸ் ஏவுகணை 2005ம் ஆண்டு இந்திய கடற்படையிலும், 2007ம் ஆண்டு இந்திய ராணுவத்திலும் சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில் வான்வழியில் ஏவும் பிரம்மோஸ் ஏவுகணையானது 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தான். பிரம்மோஸ் ஏவுகணை இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது நிர்வாகத்தின் தொடர்ச்சியில் மற்றொரு குறிப்பிடத்தக்க சான்றாகும். இது டெல்லியில் இன்றைய ஆளும் நிர்வாகத்தின் வழக்கமான பழக்கமாக இருந்தாலும் மறுக்கவோ, அழிக்கவோ முடியாத சான்றாகும்” என்று  எக்ஸ் தளப் பதிவ்ல் குறிப்பிட்டுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

From around the web