காதலியை ரகசியமாய் சந்திக்க பர்தா அணிந்து வந்த காதலன்.. பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி

 
Uttar Pradesh

உத்திரபிரதேசத்தில் தனது காதலியை சந்திக்க பர்தா அணிந்து இளைஞர் ஒருவர் வந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் தனது காதலியை சந்திக்க சந்த் புரா என்ற இளைஞர் பர்தா அணிந்து சென்றுள்ளார். ஆனால் அவரது நடத்தையில் உள்ளூர்வாசிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிலர் அவரை ஒரு திருடன் என்றும் மற்றவர்கள் அவரை குழந்தை கடத்தல்காரர் என்றும் நினைத்தனர். இதையடுத்து, அந்த நபரை பர்தாவை கழற்றுமாறு தெரிவித்தனர். இதையடுத்து, பர்தாவை அப்பகுதி மக்களை கழற்றியிருக்கின்றனர்.

Murder

பர்தா அணிந்த பெண் வேடத்தில் ஆண் ஒருவர் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் இளைஞர் கட்டடத்தில் இருந்து வெளியே வருவதையும் மக்கள் அவரை விசாரணைக்காக நிறுத்துவதையும் பார்க்க முடிகிறது. 


அந்த கும்பல் அந்த இளைஞரிடம் ஆதார் அட்டையைக் காட்டுமாறு கூறியதையடுத்து, அந்த இளைஞரை அடிக்கத் தொடங்கினர். இதையடுத்து இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் கூட்டத்திலிருந்து இளைஞரை மீட்டு சிறையில் அடைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

From around the web